சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் (செய்திகள்)

527 0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்இ இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போதுஇ யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பாக வழங்க உள்ளதுடன்இ நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்இ யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பியல் திணைக்களத்திற்கு சிங்கப்பூர் உதவ உள்ளது என அவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஜனாதிபதியை சந்தித்தப் பின்னர் அவர் இதனைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் நேற்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்திருந்த நிலையில்இ இன்று வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment