கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு!

238 0

இராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அமைச்சர் இவ்வுறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 180 ஏக்கர் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலை குறித்து வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இன்று 142 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment