பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை

307 0

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை மக்கள் பிரதிநிதிகள் குற்றச் சாட்டு

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை நிறைவேற்றப்படுவதில்லை இதனால்தான் கிராம மக்கள் ஆகிய நாங்கள் எல்லோரும்  இங்கு வந்திருக்கின்றோம் என கிளிநொச்சி நகர கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனா்.
இன்று செவ்வாய் கிழமை  கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சோனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் ஆகியோாின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது கிளிநகா் கிராம மக்கள் தங்களின் காணி பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எவையும் தீர்த்து வைக்கப்படவி்ல்லை இறுதியாக 25-01-2016  கூட்டுறவாளா் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது எங்களது பிரச்சினை தீர்க்கபடும் என  தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அத் தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை அதனால்தான் மக்களாகிய நாங்கள்  வந்திருக்கின்றோம் எங்களுக்கு தீர்க்கமான முடிவு வேண்டும் எனக்  தெரிவித்தனா்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா கிளிநகா் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்க தனியான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வது எனவும் அதனை வரும் ஓகஸ்ட் பதினைந்தாம் திகதி முன்னர் ஏற்பாடு செய்யுமாறும்  அங்கு குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடா்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
2016-01-25  ஆம் திகதி இடம்பெற்றதன் பின்னா் தற்போதே கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது வீட்டுத்திட்டம், கல்வி,சுகாதாரம், வாழ்வாதாரம், காணி ,சமூருத்தி  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன
இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினா்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை,அரியரத்தினம்  மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Leave a comment