ஈழத்து பெண்மணி கனடாவில் செய்த சாதனை!

359 0

கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து பெண்ணான அருந்ததி செல்லத்துரையின் சாதனை தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தங்கப்பானை விருது பெற்ற தீபன் திரைப்படத்தில் அருந்ததி செல்லத்துரை சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கனடாவில் வசிக்கும் அருந்ததி செல்லத்துரை சிறந்த கலைஞராக புகழ் பெற்றுள்ளார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட அவரின் வாழ்க்கை மிகவும் துயரமானதாகும்.

அருந்ததி தனது வாழ்க்கை நிலை குறித்து கனேடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். அருந்ததி தன் மகனுக்கு மன இறுக்கம் இருப்பதை கண்டுபிடித்த போது, அது என்னவென்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த அருந்ததிக்கு கனடாவில் காணப்பட்ட பல விடயங்கள் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

1999ம் ஆண்டு தனது ஊரான யாழ்ப்பாணத்தின் கிராம பகுதியில் இராணுவம் புகுந்து உள்ளூர் மக்களை அச்சுறுத்திய பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

பிரித்தானியாவில் வாழ்ந்த அவரின் மூத்த சகோதரரின் உதவியுடன், சிங்கப்பூர் வழியாக கலிபோர்னியாவில் ஒரு குடிவரவு முகாமுக்கு தப்பிச் சென்றார். பின்னர் தனது சகோதரருடன் அருந்ததி கனடாவுக்கு சென்றடைந்தார்.

அவர்கள் அங்கு நவம்பர் மாதம் அளவில் சென்றிருந்தார்கள். நவம்பர் மாதம் மிகவும் குளிரான காலப்பகுதியாகும். எனவே, “எனக்கு இது பிடிக்கவில்லை. ‘என்னை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என அருந்ததி சகோதரரிடம் கேட்டுள்ளார்.

“இது ஒரு நல்ல இடம் என” அவரது சகோதரர் பதிலளித்துள்ளார். பின்னர் அவர்கள் Jane மற்றும் Finch குடியேற்ற கட்டடங்களில் குடியேறிய நிலையில் அவர் கனேடியராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவர் தனது ஆடைகளை ஆங்கில முறைப்படி மாற்றிக் கொண்டார். சுடிதாரில் இருந்து ஜீன்ஸ் அணிய ஆரம்பித்தார். காட்டூன்களை பார்த்து ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

காலை நேரங்களில் பாடசாலை செல்ல ஆரம்பித்தார். மாலை நேரத்தில் Tim Hortons என்ற இடத்தில் வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட அருந்ததிக்கு பிரதீப் என்ற மகனும் சுபிட்ஸா என்ற மகளும் இருந்தனர்.

பிரதீப் பாடசாலை வயதை அடைந்த போது, அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது, அவர் உணவை மறுத்ததோடு மற்றவர்களை தாக்குவதற்கும் ஆரம்பித்தார். இதன்போதே அருந்ததி மன இறுக்கம் பற்றி கற்றுக் கொண்டார்.

அந்த நிலையில் அருந்ததியின் கணவர் திடீரென விபத்தில் உயிரிழந்தார். “நான் ஒரு தனித் தாயாக இன்னமும் மொழி பிரச்சினையில் போராடுகின்றேன். அது இலகுவான விடயம் அல்ல என தெரிவித்தார்.

மேலும், எனது மகன் பொது மக்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டு வந்தார். கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்குவதற்கும் இது பாரிய சவாலாக மாறியது.

எனக்கு என்று எந்த நண்பர்களும் இல்லை, அப்போது எனக்கான ஒவ்வொரு கதவுகளும் மூடியது போல் உணர்ந்தேன்.” எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் இறுதியாக தெற்காசிய ஆட்டிஸம் விழிப்புணர்வு மையம் (SAAAC) குறித்து குறிப்பிட்டார்.

இது இலாப நோக்கமற்ற குழு. மன இறுக்கம் பற்றி ஆய்வு நடத்துகின்றது. இங்கு சிகிச்சை மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமூகத்தை வழங்குகின்றார்கள்” என அருந்ததி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் SAAAC குழுவினால் நிவாரணமளிக்கப்படுகின்றது. இது எனக்கு நல்லது. ஏனென்றால் என்னைப்போன்று மற்ற தாய்மார்களும் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்துவதை பார்த்தேன். என்னால் இங்கு பேசவும் சிரிக்கவும் முடிந்தது என அருந்ததி தமது வாழ்க்கை அனுபவம் பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment