சிங்கபூரின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

250 0

சிங்கபூரின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஸ்ணன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், சிங்கபூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலிய பிஸப்பும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

அவர் தமது விஜயத்தின் போது, இலங்கையில் நிலவும் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment