இலங்கை சிம்பாப்வே – இறுதி நாள் ஆட்டம் இன்று

245 0

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறுவதற்கு இன்னும் 218 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 3 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடரவுள்ளது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது சிம்பாப்வே அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 377 ஓட்டங்களைப் பெற்று சகல விகட்டுகளையும் இழந்தது.

தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, ஆட்ட நேரம் நிறைவடையும் போது 170 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே 356 ஓட்டங்களையும், இலங்கை அணி 346 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment