சுவிஸ்குமாரை விடுவிக்க விஜயகலா பணித்திருந்தார்?

9920 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவிற்கு விடுவிக்க பணிப்புரையினை ஜக்கிய தேசியக்கட்சி ராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனே பிறப்பித்துள்ளதாக தெரியவருகின்றது.எனினும் அமைச்சர் விசாரணை வளையத்தினுள் சிக்குவதிலிருந்து காப்பாற்ற லலித் .ஏ.ஜெயசிங்கவை கைது செய்து அவரை பலியாடாக்க முயற்சிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னதாக நெருங்கிய ஊடகவியலாளர் ஒருவருடன் தகவல் பரிமாறுகையினில் தனக்கு ராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடமிருந்தும் சுவிஸ்குமாரை விடுவிக்க அழுத்தம் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அவரது விரிவுரையாளராக இருந்த கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறனே சுவிஸ்குமாரினை விடுவிக்க ஆலோசனை வழங்கியதாக பேசப்பட்டு வந்தது.அதனையடுத்த சிறப்பு ட்ரயல் பார் விசாரணை தீர்ப்பாயம் முன்னதாக கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் ஆஜராகி வாக்குமூலமளித்திருந்தார். எனினும் அவர் தன்னுடன் சிவில் உடையினில் வருகை தந்திருந்த காவல்துறையினர் இருவரிடமும் தான் சுவிஸ்குமாரை கையளித்ததாக தெரிவித்திருந்தார். தனது மாணவனான முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க பற்றி ஏதும் பிரஸ்தாபித்திருக்கவில்லை.

சம்பவ தினத்தன்று பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட சுவிஸ்குமாரை ஜக்கிய தேசியக்கட்சி ராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனே தனது ஆதரவாளர்கள் சகிதம் மீட்டெடுத்திருந்தார்.

இதனிடையே முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் அதிகாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையினில் எதிர்வரும் 25 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் அவர் தனது வாக்குமூலத்தினில் உண்மைகளினை போட்டுடைக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

Leave a comment