4 மாடி கட்டிடத்தில் ஏறி டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் போராட்டம்

37251 10

அரசுக்கு எதிராக டிராபிக் ராமசாமி 4 மாடி கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில், டிராபிக் ராமசாமி நேற்று மாலை தனது அலுவலக கட்டிடத்தின் 4-வது மாடிக்கு சென்று சட்டை அணியாமல் பால்கனியில் படுத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசாரை பார்த்ததும் அவர், ஒருமையில் திட்டி அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், நீங்கள் அருகில் வந்தால் கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

அப்போது டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அங்கு போராடிவரும் பெண்களை போலீசார் மிரட்டுவதால் தஞ்சை எஸ்.பி. மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர்களை கைது செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். என்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடுவேன்” என்றார்.

பின்னர் பால்கனியில் இருந்து அவரை கீழே இறக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் கீழே இறங்காமல் தொடர்ந்து முரண்டுபிடித்தார். எனவே போலீசார் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவந்து அலுவலகத்தில் அமரவைத்தனர்.

இதனால் சுமார் 2 மணி நேரம் நீடித்த டிராபிக் ராமசாமியின் தற்கொலை மிரட்டல் போராட்டம் முடிவுக்கு வந்தது.டிராபிக் ராமசாமியின் போராட்டம் பற்றி அறிந்ததும் ஏராளமானோர் அப்பகுதியில் கூடிவிட்டனர். இதனால் பாரிமுனை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

There are 10 comments

  1. Pingback: xxxx

  2. Pingback: 9xflix com

  3. Pingback: free video

  4. Pingback: 123 movies

  5. Pingback: kinokrad

  6. Pingback: batmanapollo.ru

  7. Pingback: batmanapollo.ru - psychologist

  8. Pingback: elizavetaboyarskaya.ru

  9. Pingback: 2023

  10. Pingback: ipsychologos

Leave a comment