வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரை தப்பிச் செல்வதற்கு இடமளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுரை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.
அவர் நேற்று இரகசிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவி வித்யா கடந்த 2015ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பில் சந்தேகத்திற்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஸ்விஸ் குமார் என்ற பிரதான சந்தேகத்திற்குரியவர் காவல்துறை பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இதனை அடுத்து அவர் கொழும்பில் வைத்து கைதுசெய்து செய்யப்பட்டார்.
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சாட்சிப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்; இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையிலேயே, சந்தேகத்திற்குரியவர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லலித் ஜெயசிங்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபராக செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

