மீன்பிடி தொடர்பில் பாராளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தினால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்(காணொளி)

4790 0

பாராளுமன்றில் மீன்பிடி தொடர்பிலான புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்,

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இந்திய மீனவர்கள், கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், புதிய கடற்தொழிற் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், கடந்த 9ஆம் திகதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்; கடந்த 12ஆம் திகதி  மீனவளத்துறை கூடுதல் இயக்குநர் மீனவசங்கத்தலைவர்களுடன் நடாத்திய பேச்சுவார்தையை தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொன்டனர்.

இதனையடுத்து இன்று வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்வதாகவும் அறிவித்திருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்ற புதிய சட்டத்தால் மீன்பிடி தொழிலாளர்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு மீன்பிடி தொழிலாளர்கள் வருகையின்றி துறைமுகம் வெறிச்சோடியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment