பூர்வீக நிலத்தில் குடியேறுவதற்காக போராட வேண்டிய காட்டாயத்திற்குள் தாம் தள்ளப்பட்டுள்ளதாக கேப்பாபுலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கேப்பாபுலவு மக்களின் தொடர்போராட்டம் இன்றுடன் 137 ஆவது நாளை எட்டியுள்ளது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு பூர்வீக மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் தமக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது காணிகளில் இராணுவம் வருமானத்தை பெற்றுவருவதாகவும், குற்றம்சுமத்துவதோடு தமது காணிகளில் தம்மை விரைவில் குடியமர்த்த அனைவரும் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
ஐந்து மாதங்களாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் மக்கள், தம்மை சந்திக்க வரும் மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதிகளை தந்து செல்வதாகவும், எனினும் அவை நிறைவேற்றப்படுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

