யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, முல்லைத்தீவிற்கு அதிக நிதியொதுக்கீடு வழங்கப்பட வேண்டும்-பிரபாகணேசன்

782 2

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை முன்னேற்றுவதற்கு தன்னால் முடிந்த அர்ப்பணிப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான இணைப்பாளர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தால் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான இணைப்பாளர் பிரபாகணேசன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (14 ) முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைப்பாடுகளை ஆராய்ந்து அதனூடாக அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தசந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக பணியார்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேசசெயலக  பிரிவுகளிலும் பணியாற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தசந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை யுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாவட்டங்களைவிட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அதிகமான நிதியொதுக்கீடுகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என தான் எண்ணுவதாகவும் இதன்போது பிரபாகணேசன் குறிப்பிட்டார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் விவசாய மாவட்டம் என்பதால்விவசாயத்தை மேம்படுத்துவதற்கு வங்கிகளுடாக கடனுதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் பிரபாகணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment