மேல் மாகாணத்தில் டெங்கு..

249 0

மேல் மாகாணத்தில் டெங்கு குடம்பிகள் காணப்படும் 2 ஆயிரத்து 500 இடங்கள் மற்றும் டெங்கு தொற்று பரவக் கூடியவகையிலான 30 ஆயிரம் இடங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் நான்கு நாட்கள் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளின்போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் 89 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று இடம்பெறுகின்றது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊடகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment