ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் பிரதமர் தலைமையில்

1074 100

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், 1977 ஆம் பெற்ற வெற்றியின் 40 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் அரசியல் பலிவாங்கலுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுப்பது குறித்தும் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment