பொலிஸ் அதிகாரிகள் 24 பேருக்கு உடனடி இடமாற்றம்

250 0

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 24 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 10 பேருக்கும் பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

இதில் களுத்துறை வலயம், கொழும்பு குற்றவியல் பிரிவு, அமைச்சு பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றில் பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 03 பேருக்கும், தலாதுஓய, கனகராயம்குளம், அம்பலாந்தோட்டை, வீரம்புகெதர, பிபிலை, கொஸ்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களில் நிலைய அதிபர்களாக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 09 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு கொழும்புக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதேவேளை வீரகுல, உடகம, அக்குரஸ்ஸ, அலவ்வ புதுக்குடியிருப்பு, கருவலகஸ்வெவ பியகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் நிலைய அதிபர்களாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 14 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கொகரகொல்ல பொலிஸ் நிலையத்தின் 15 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

Leave a comment