முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்பான தீர்மானம் கோட்டை நீதவானிடம்

312 0

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சரியான தீர்ப்பொன்றை பெற்றுக் கொள்ளுமாறு வத்தளை நீதவான் அறிவித்துள்ளார். 

வத்தளை நீதவான் பூர்ணிமா பரணகம நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீமன்ற செய்தியாளர் கூறினார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க பாதுகாப்பின் கீழ் வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர் தொடர்பில் கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு சென்று சந்தேகநபரை பார்வையிட்ட பின்னர் சரியான உத்தரவை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான், வத்தளை நீதவானுக்கு அறிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் இது தொடர்பில் கோட்டை நீதவானே சரியான தீர்ப்பொன்று வழங்க வேண்டும் என்று வத்தளை நீதவான் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a comment