ஆதார வைத்தியசாலைக்கு புதிய கட்டிடங்கள் திறப்பு

330 0

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள வைத்திய நிபுணர் தங்குமிட விடுதிக் கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட பல் வைத்திய சிகிச்சை நிலையம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பன நேற்று (13) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டினால் திறந்து வைக்கப்பட்டன. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட இப் புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் திருமதி என்.கிறேஸ் மற்றும் காத்தான்குடி ஆதாரல வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் உட்பட வைத்திய நிபுனர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வைத்திய சாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வைத்திய நிபுனர்கள் தங்குமிட விடுதிக் கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட பல் வைத்திய சிகிச்சை நிலையம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பன திறந்து வைக்கப்பட்டன.

Leave a comment