செம்மொழி தமிழாய்வு மைய முத்திரையில் தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் போது, செம்மொழி தமிழாய்வு மைய முத்திரையில் இந்தி எழுத்துதான் இருக்கிறது. தமிழ் எழுத்து இல்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த அமைப்புக்கு முதல்-அமைச்சர்தான் தலைவர். எனவே அந்த முத்திரை தமிழ் எழுத்துக்களில் அமையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்:- இந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்ட போது தமிழில் பெயர் இடம் பெற வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை வைத்து அதை பெற்றுத்தந்தார். இப்போதும் தமிழில் முத்திரை அமைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அமைச்சர் செங்கோட்டையன்:- இந்த முத்திரை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் அந்த முத்திரை நகலை அனுப்பியுள்ளார். அதில் தமிழ் எழுத்தும் இடம் பெற்று இருக்கிறது.

