தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை

529 0

vithusa_4தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை. பெண்கள் தனியாக பயனங்கள் கூட மேற்கொள்ள முடியாத அவல நிலையே தற்போது காணப்படுகின்றது.இவ்வாறு நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணியின் அமர்வில் கலந்து கொண்டவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- பெண்களுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை. அவர்கள் தனியாக எங்கும் பயணங்களை மேற்கொள்ள முடியாத அச்சமான நிலமையே இங்கு காணப்படுகின்றது.ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பெண்களுக்க முழுமையான பாதுகாப்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் பெண்கள் சரிநிகர் சமமாக மதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக இருவு வேளைகளிலும் பெண்கள் தனியான யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு பஸ் பயணங்களை மேற்கொண்டு பாதுகாப்பாக வீடுகளுக்குப் போய் சேர முடியும். இந்த நிலை இப்போது இல்லை.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களை சமமாக மதித்தார்கள். அக்காலத்தில் பெண்கள் கனரக வாகனங்கள் கூட ஓட்டிச் சென்றார்கள். சகல இடங்களிலும் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட்டு வேலைவாய்ப்புக்களும் கொடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலை இப்போது இல்லை. பெண்களை தனியாக வெளியல் அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொள்ளுகின்றார்கள். பெண்களை பாதுகாப்பும் சட்டம் மேலும் இறுக்கமாக்கப்பட்டு, அதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.