செயலணியின் அமைர்வில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகளின் கருத்து

540 0

Puthukkudi-1இலங்கையில் இன்னும் சட்டத்திற்கு புறம்பான இரகசிய தடுப்பு முகாங்கள் உள்ளன. இவ்வாறான இரகசிய தடுப்பு முகாங்களிலேயே காணாமல் போன எமது உறவுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இரகசிய முகாங்கள் தொடர்பாக தகல்களை வெளியிடாது. சர்வதேசம் தலையிட்டு இலங்கையில் உள்ள இரகசிய முகாங்கள் தொடர்பான தேடுதல்களை செய்தால் மட்டுமே இவை தொடர்பான தகவல்கள் வெளிப்படும்.

இவ்வாறு நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியின் அமைர்வில் கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- இலங்கையின் சட்டவிதிமுறைகளின்படி தடுத்து வைக்கப்படுபவர்கள் சிறைச்சாலைகளின் மட்டுமே தடுத்து வைக்கப்பட முடியும். ஆனால் இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் காணாமல் போனவர்களோ, சரணடைந்தவர்களோ, கடத்தப்பட்டவர்களோ, கைது செய்யப்பட்டவர்களோ இல்லை.

ஆப்படியானால் அரசாங்கம் இன்னும் சட்டவிரோதமான இரகசிய முகாங்களை வைத்திருக்கின்றது. அதில்தான காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை மறைத்து வைத்திருக்கின்றது.இவ்வாறான முகாங்கள் தொடர்பான தகவல்கள் இலங்கை அரசாங்கம் ஒருபோதும் வெளியிடப் போவதில்லை. வெளியிட்டால் தனது அரசிற்குத்தான் பாதிப்பு என்று அவர்கள் எண்ணுவார்கள்.இந்நிலையில் சர்வதேசத்தின் உதவிகள் பெறப்பட்டு, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டுவந்து இலங்கையில் உள்ள இரகசிய முகாங்கள் தொடர்பாக தேடுதல் நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடு மேற்கொண்டால் காணாமல் போகச் செய்யப்பட்ட அதிகளவானவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரும் என்றனர்.