வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் சட்டமூலத்தின் தயாரிப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவு- மகிந்த அமரவீர

353 0
வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் சட்டமூலத்தின் தயாரிப்புப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கடற்றொழில் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதன்கீழ் எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு படகுகளின் உரிமையாளர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்த அபராதத் தொகையை 175 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் படகுகளை விடுவிக்க, அவற்றின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில்முன்னிலையாக வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கருதியே தமிழக கடற்றொழிலாளர்கள் கடந்த தினங்களில் போராட்டத்தை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment