கருணாநிதியை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றார் கோபால்கிருஷ்ண காந்தி

705 0

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் கோபால கிருஷ்ண காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்படுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 18 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்தது.
இதனையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபால்கிருஷ்ண காந்தி நாடு முழுவதும் சென்ற தனக்கான ஆதரவை கோரும் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அதன் ஒருபகுதியாக தமிழகம் வந்த கோபால்கிருஷ்ண காந்தி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும், கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலினை ஆகியோரிடம் தேர்தலில் தமக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, கனிமொழி, திருச்சி சிவா, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment