மரம் முறிந்து விபத்து: 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்

400 0

மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில், உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுப்பிரமணி, கபாலி மகன் முருகன் மற்றும் தண்டபாணி மகன் சுதர்சனம் ஆகிய 3 பேரும் 11.7.2017 அன்று புத்திரன்கோட்டை கிராமத்திலிருந்து சூனாம்பேட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தின் அருகே இருந்த ஆலமரம் முறிந்து விழுந்ததில், முருகன் சம்பவ இடத்திலேயும்; சுப்பிரமணி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, முருகன் மற்றும் சுப்பிரமணி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுதர்சனத்திற்கு 50,000 ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment