வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடு(காணொளி)

757 16

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டிய விசேட வழிபாடும், கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை வேண்டி விசேட வழிபாடும், கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், பொங்கலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்ததுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர்.

Leave a comment