இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டண அறவீடு – விசாரணைகள் நடத்தப்படவுள்ளது

239 0

தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிக கட்டண அறவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது அதற்காக அறவிடப்படும் முழுமையான அறவீடுகள் குறித்த நிர்ணய கட்டணங்கள் சுகாதார அமைச்சினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, சாதாரண இரத்த பரிசோதனைக்காக 25 ரூபாவும், டெங்கு நோய் தொற்று தொடர்பான இரத்த பரிசோதனைக்கு ஆயிரம் ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சில தனியார் மருத்துவமனைகளில் அமைச்சின் கட்டண நிர்ணயங்களை மீறி அறவீடுகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment