ஏவுகணையை தாக்கி அழிக்கும் எதிர் ஏவுகணை தொழில்நுட்பம்: அமெரிக்கா விரைவில் சோதனை

212 0

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் சோதனை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. இச்செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்துவதாக தெரியவில்லை.

ஏவுகணை சோதனைகளில் இருந்து வடகொரியாவை திசை திருப்ப அமெரிக்கா மறைமுகமாக பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது வந்தது.
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை முறியடிக்கும் வகையில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய திறன் கொண்ட எதிர்-ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

தாட்(THAAD) என்ற இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை, அடுத்த சில நாட்களில் சோதனை செய்ய உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த சோதனையானது அலஸ்காவில் உள்ள பசிபிக் விண்வெளித்தளத்தில் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வகை எதிர்-ஏவுகனைகள் குறுகிய நடுத்தர மற்றும் இடைநிலை ஏவுகணைகளை தாக்கி கீழே வீழ்த்த பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment