வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் கிளிநொச்சியில் வெளீடு

245 0

வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் இன்று வெளீடு செய்யப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் இடம்பெற்றது
1 விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள்
2 தடம்
என்ற இரண்டு புத்தகங்களுமே இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மனிதாபிமான சேவையாற்றிய வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களிற்கு மனிதாபிமான பணியாளனுக்கான விருதும் வழங்கி வைக்கப்பட்டதுஇகுறித்த நிகழ்வில் உரையாற்றி கஜேந்திரகுமார் உரையாற்றுகையில்

1987ம் ஆண்டு காலப்பகுதியிலேயே எவ்வித அழிவுகளும் இல்லாமல் பாதுகாத்திருக்கலாம். ஏனெனில் அப்போதைய
13ம் திருத்த சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது குறித்த முறைமையைஅப்போதிருந்த தலைவர்கள் ஏற்றக்கொள்ளவில்லை. ஆனால் ஈபி ஆர் எல் எப் மாத்திரம் ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கு இணைந்த தேர்தலில் போட்டியிட்டது

இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியாவை கொண்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்று கொள்ளலாம் என்பதாகும்.
ஆனால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளோம். இன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒற்றைாட்சி என்ற பதம் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அன்று ஒற்றை ஆட்சியின் கீழான தீர்வை ஏற்றுக்கொள்ளதாத எம்மைகொண்டே இன்று எமது தலைவர்களால் தீர்வு திணிக்கப்படுகின்றது எமக்கு துரோகம் செய்வது சிங்கள அரசு அல்ல எமது தலைமைகளே துரோகம் செய்கின்றது என்றார்.

இவ்வாறு உருவாக்கப்படும் எல்லா அரசியலமைப்பக்களின் கீழ்பகுதியிலும் தமிழ் ஆஙிகில மொழிகளில் குறிப்பிட்பட்டுள்ள விடயங்களில் கருத்து வுறுபாடுகள் இருப்பின் சிங்கள மொழியில் உள்ளதே ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும்  அவ்வாறு இரு மொழிகளிலும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒற்றை ஆட்சி என்ற பதம் சிங்கள மொழியில் உள்ளமையால் அதுவே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment