வடமராட்சி பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட கடற்றொழில் அமைச்சர் அனுமதி!

380 0

kaddaikadu-attack-07வடமராட்சி கடற்பரப்பிற்குள் அத்துமீறி 700 படகுகளுடன் நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தன் பாதுகாப்புடன் அங்கு சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றாதால் அப்பகுதியினைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் தமது பாரம்பரிய இடங்களை தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணி முன் வடமராட்சி மீனவர்களும், மருதங்கேணி பிரதேச செயலரும் இணைந்து குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மீனவர்களும் பிரதேச செயலரும் குறிப்பிடுகையில்:- வடமராட்சி பகுதி கடற்பரப்பில் அண்மைக்காலமாக தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களினால் எமது கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக அவர்கள் பாரம்பரியாமாக கடற்றொழில் செய்யும் இடங்களை தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே எங்களுடைய மீனவர்களில் வலைகள், பாடுகளை அறுத்து அழிக்கின்றார்கள். இதனால் பொருளாதார ரீதியிலும் எமது மீனவர்கள் பாதிப்புக்களை எதிர் கொள்ளுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடனே இவற்றை செய்து வருகின்றார்கள். இதனால் அவர்களை எதிர்த்து கேள்ளி கேட்கக் கூட எமது மீனவர்களினால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

இது தொடர்பாக மருதங்கேணி பிரதேச செயலர் குறிப்பிடுகையில்:- இங்குள்ள மீனவர்கள் கடலட்டை மற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவது குறைவு, இதனால் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடலில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிக்கும் செயற்பாடுகளில் தென்னிலங்கையில் உள்ள 3 நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கான உத்தியோக பூர்வமான அனுமதியினை மருதங்கேணி பிரதேச செயலரிடமோ அல்லது கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களமோ வழங்கவில்லை. இருப்பினும் மத்திய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் அதற்கான அனுமதி வழங்கியதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் 700 படகுகள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது இருப்பினும் பகல் பொழுதில் மட்டும்தான் தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். ஆழ்கடலில் மட்டும்தான் அவர்கள் தொழில் செய்ய முடியும். குறிப்பகா 5 கிரோ மீற்றல் தூரத்திற்கு அப்பல்தான் தொழில் செய்ய முடியும். ஆனால் அவர்கள் தமிழ் தமீனவர்களின் கரைவலைகளைக் கூட தமது 40 கோஸ் வலுப் படகுகளால் அறுத்துச் செல்கின்றார்கள். இதனால் இங்குள்ள தமிழ் மீனவர்கள் பாதிப்புக்களை எதிர் கொள்ளுகின்றார்கள் என்றார்.