மாந்தை கிழக்கு வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேசசபையின் செயலாளர் (காணொளி)

295 0

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்; தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் பா.சிவபாலராஜா மாந்தைகிழக்கு பிரதேசசபையின் கீழ் உள்ள 50 வீட்டுத்திட்டம், 30 வீட்டுத்திட்டம், பாலிநகர், புவரசன்குளம, கொல்லவிளான்குளம் அம்பாள்குளம், ஆகிய பகதிகளில் குடிநீர் நெருக்கடிகள் காணப்படுவதாக தெரிவித்தார்.

இவற்றுக்கான குடிநீர் விநியோக நடவடிக்;கைகள் பிரதேச சபைக்கு சொந்தமான மூன்று உழவு இயந்திர பவுசர்கள்;, மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட இரண்டு பவுசர்கள் என 5 பவுசர்;கள் மூலம் தலா ஆயிரம் லீற்றர் கொண்ட கொள்கலன்கள் 25 இடங்களில் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் மேற்காள்ளப்பட்டு வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறட்சி காரணமாக நாள் ஒன்றுக்கு ஒன்பதாயிரம் லீற்றர் தண்ணீரைப் பெறக்கூடியதாக இருந்த கிணறுகளில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் லீற்றர் வரையான தண்ணீரை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இப்பதாகவும் தெரிவித்த அவர் தற்போது வேறு கிணறுகளை இனங்கண்டு அவற்றின் நீரை பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதாகவும் பரிசோதனையின் பின்னர்; வரட்சி நிலவும் ஏனைய பகுதிகளுக்கும் தண்;ணீர் விநியோகம் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment