நானுஓயாவில் 41 பேர் பொலிஸாரால் கைது

207 0

கடந்த 15.06.2017 அன்று நுவரெலியா நானுஒயா பகுதியில் இடம்பெற்ற விபத்தின் ​போது அசாதாரண நிலைமையை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 41 பேரை எதிர்வரும் 18.07.2017 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ருவான் டி சில்வா இன்று (04.07.2017) உத்தரவிட்டுள்ளார். 

நுவரெலியா நானுஒயா பகுதியில் கடந்த 15.06.2017 அன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லொரியில் மோதுன்டு சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார். இதனை தொடர்ந்து நானுஒயா நகரில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது பொது மக்கள் ஆத்திரமடைந்து குறித்த லொரியை தீ மூட்டி எரித்தனர். இந்த விடயம் தொடர்பாக நானுஒயா பொலிஸாரினால் 41 பேர் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே மேற்கண்டவாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிராக சட்டத்திற்கு முரணாக ஒன்று கூடியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, அரசாங்க அதிகாரிகளுக்கு கடமையை செய்யவிடாமல் தடை ஏற்படுத்தியது, அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது ஆகிய குற்றங்கள் கூறப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்னும் ஒரு சிலரை கைது செய்யவுள்ளதாகவும் நானுஒயா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment