இந்தியன் வங்கியில் ஜி.எஸ்.டி. சேவைகள் தொடக்கம்

215 0

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள சரக்கு, சேவை வரிக்கான சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள சரக்கு, சேவை வரிக்கான சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அறிமுக விழா இந்தியன் வங்கியில் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்தியன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான கிஷோர் கரத், விழாவில் கலந்து கொண்டு சரக்கு, சேவை வரி சேவைகளை தொடங்கிவைத்தார். இதில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர்கள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கு பெற்றனர்.

இந்த சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமல் சரக்கு, சேவை வரிக்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இணையதள கணக்கு மூலமும், வங்கியின் அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சரக்கு, சேவை வரியை சுலபமாக செலுத்தலாம். சரக்கு, சேவை வரி கவுன்சில் அங்கீகாரம் அளித்த 25 வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் பயன்பெறும் வகையிலும் ‘இந்த் ஆவாஸ்’ என்ற புதிய வீட்டுக் கடன் திட்டமும் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment