கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்துவது அனைத்து பிக்குகளையும் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெங்கமுவே நாலக தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
களணி தர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.
சிங்களவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆளும் அரசாங்கம் செயற்படுகின்றது.
இது தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

