முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டப கட்டடத்தினை வஜிர அபேவர்தன திறந்துவைத்தார்

229 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  மாநாட்டு மண்டப கட்டடத்தினை  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களால்

இன்று காலை 9.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது

முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மண்டபத்தின் பெயர் பலகையினை அமைச்சர் வஜிரஅபேவர்தன அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்து கட்டத்தினை திறந்து வைத்து கருத்துரை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து வளாகத்தில் அமைக்கப்பெற்ற சிற்றுண்டிசாலையினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் திறந்துவைத்துள்ளார்.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்,மற்றும் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , பொலன்நறுவை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சிட்ணி ஜெஜரட்ண, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் சிவனேசன், பிரதேசசெயலாளர்கள் மற்றும் பொலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Leave a comment