சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும் – கேப்பாபுலவு மக்கள்

291 0

தாம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுவது தொடர்பில் தாம் கவலையடைவதாக கேப்பாபுலவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 121 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்குசொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது காணிகளிலுள்ள பொருளாதாரத்தை இராணுவத்தினர் அனுபவித்து வரும் அதேவேளை தாம் பொருளாதாரத்தை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது சொந்த நிலத்தில் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டத்தை தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சொந்த நிலங்களை விட்டு வெளிறேிய மக்களை 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வந்தபோதும் அவர்கள் சொந்தநிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் இவர்களை வெளிநாட்டு பிரமுகர்கள் சிலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Leave a comment