வித்தியா படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விசாரணைகள்…….(காணொளி)

359 0

புங்குடுதீவு மாணவி வித்தியா, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2015 மே மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை தொடர்பான விசாரணைகள் முடிவடைந்ததை அடுத்து, 9 சந்தேக நபர்களுக்கு எதிராக, 41 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசத் டெப்பினால் நியமிக்கப்பட்ட, நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட குழு முன்னிலையில் குறித்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணை இடம்பெறவுள்ளது.

விசேட வழக்கு தொடுனரான சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Leave a comment