நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும்…..(காணொளி)

469 0

3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

நுவரெலியா, கண்டி, காலி, கோட்டை தபால் நிலைய கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்,

தபால் சேவை ஊழியர்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க முன்னணியினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க முன்னணியின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மலையகத்தில் உள்ள அஞ்சல் அலுவலக பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாக அடையாளவேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

மலையகத்தில் நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உபஅஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் இரண்டாவது நாளாக அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மலையகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதனால் பல்வேறு தேவைகளுக்காக அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 3 ஆயிரத்து 400இற்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment