மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகளின் நிலைமைகள் தொடர்பில் தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் சிந்திக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை (காணொளி)

496 0

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் செயற்பாடுகளும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள், மாணவர்கள், பரீட்சார்த்திகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதன்காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களும் சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அரச பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் அரச உத்தியோகத்தர்களும் அனுமதி அட்டைக்காக காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியான விடுமுறையின் பின்னர் இன்று தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பெருமளவானோர் தபால் நிலையங்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதைக் காணமுடிந்தது.

இந்நிலையில், பரீட்சார்த்திகள் மற்றும் மாணவர்களின் நன்மைகருதி தபால் திணைக்களம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment