ட்ரம்ப் வெளியிட்ட பயணத்தடை சட்ட மூலம் பகுதி அளவில் மீள அமுலாக்கப்படுகிறது.

224 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முஸ்லிம் தேசங்களின் பிரஜைகளுக்கான பயணத்தடை சட்ட மூலம் பகுதி அளவில் மீள அமுலாக்கப்படுகிறது.

அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

ஆறு முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு 90 நாட்களுக்கும், அகதிகளுக்கு 120 நாட்களுக்கும் தடைவிதிக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்பினால் இரண்டு தடவைகள் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களுக்கும் நீதிமன்றங்களின் ஊடாக இடைக்காலத் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சட்ட மூலத்தை பகுதி அளவில் நடைமுறைப்படுத்த அனுமதித்துள்ள உச்ச நீதிமன்றம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இது குறித்த இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.

இது தமக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றி என்று டொனால்ட்ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Leave a comment