பெங்களூரு சிறையில் இளவரசியுடன், டி.டி.வி. தினகரன் சந்திப்பு

389 0

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியுடன், டி.டி.வி.தினகரன் மற்றும் இளவரசியின் குடும்பத்தினர் நேற்று சந்தித்து பேசினர்.

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசியுடன், டி.டி.வி.தினகரன் மற்றும் இளவரசியின் குடும்பத்தினர் நேற்று சந்தித்து பேசினர்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறையில் உள்ள சசிகலாவை அவ்வப்போது அ.தி.மு.க (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்று பார்த்து அ.தி.மு.க கட்சி விவகாரங்கள், அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு டி.டி.வி.தினகரன் வந்தார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், அவருடைய மனைவி மற்றும் இளவரசியின் மகள் ஷகிலா, அவருடைய கணவர் ராஜராஜன் ஆகியோர் வந்திருந்தனர். மதியம் 2.50 மணிக்கு சிறைக்குள் சென்ற இவர்கள் மாலை 4.30 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நான் எனது சித்தியை (சசிகலா) சந்திக்கவில்லை. இளவரசியை தான் சந்தித்தேன்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, ‘கட்சியில் இருந்து 60 நாட்கள் ஒதுங்கி இருப்பதாக கூறிய நீங்கள், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அ.தி.மு.க (அம்மா) அணி ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளர்களே?’ என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், “ஒதுங்கி இருந்தால் அறிக்கை கொடுக்க கூடாதா?. இரு அணிகள் இணைப்பில் இடையூறாக இருப்பதாக கூறிய சகோதரர்களுக்காக ஒதுங்கி நிற்கிறேன். அதே நேரத்தில் வீட்டுக்கு வரும் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களை சந்திப்பதில் என்ன தவறு இருக்கி றது. அதனால் அவர்களை சந்தித்து வருகிறேன். கட்சியின் பொதுச்செயலாளர் ஆணை யை ஏற்று அவர் கூறிய செய்தியை அறிக்கையாக கொடுத்து உள்ளேன்” என்றார்.

Leave a comment