ஐ.தே.க. – சு.க. புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்­ர­ம­ரட்ன திட்­ட­வட்டம்

406 0

தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் நிதி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எரான் விக்­கி­ர­ம­ரட்ன தெரி­வித்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தேவைக்­கேற்ப எம்மால் தேர்­தலை நடத்த முடி­யாது. எந்­த­வொரு தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ராக உள்ளோம். இதன்­படி விரைவில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்டகோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தற்­போது நாட்டில் நிலை­கொண்­டுள்ள பொரு­ளா­தார பிரச்­சினை தொடர்பில் ஆராய வேண்­டி­யுள்­ளது. தற்­கா­லிக பிரச்­சி­னைக்கு தீர்­வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். நிரந்­தர தீர்­வை பெற வேண்­டு­மாயின் ஸ்திர திட்­டங்­களை  தயா­ரிக்க வேண்டும். குறு­கிய கால நோக்­கத்­திற்­காக தீர்­மா­னங்­களை  எடுக்கக்  கூடாது.

நீண்ட கால திட்­டத்­திற்கு நாம் செல்­ல­வுள்ளோம்.   வரவு – செல­வுத்­திட்ட பற்­றாக்­கு­றையை குறைத்­துக்­கொள்ள வேண்டும். கடன் பெறு­வதையும் குறைத்­துக்­கொள்ள வேண்டும். நேரடி முத­லீ­டு­களின் மூல­மாக இலாபம் அடை­ய­மு­டியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

மேலும் ஏற்­று­ம­திக்கு முத­லிடம் கொடுக்க வேண்டும். இலங்­கையில் இருப்­பது சிறிய சந்­தை­யாகும். எமக்கு பாரிய சந்தை தேவை­யாகும். அத்­துடன் வீண் செல­வினத்­தையும் குறைத்­துக்­கொள்ள வேண்டும். அரச நிறு­வ­னங்­களின் நஷ­்டத்தை முழு­மை­யாக குறைத்­துக்­கொள்ள வேண்டும். இல்­லையேல் மக்­க­ளுக்கே அது வந்து சேரும்.

பொரு­ளா­தா­ரத்தில் நிலை­யான தன் ­மையை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். வரிக் கொள்­கையில் நிலை­யான தன்­மையை கொண்டு வர­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் புதிய வரிக் கொள்­கையை சமர்ப்­பிப்போம். அடுத்த மாதம் அது சமர்ப்­பிக்­கப்­படும். இதன்­போது விவாதம் செய்­யப்­படும். நிலை­யான தன்­மையை ஏற்­ப­டுத்தும் நோக்­கு­டனேயே புதிய வரிக் கொள்கை தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த காலங்­க­ளில தேர்­தலை மைய­மாக வைத்தே பொரு­ளா­தாரம் சார்ந்த தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. அர­சியல் வழிப் போக்கில் இருந்து சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் முழு­மை­யாக மாறி­யுள்­ளன. மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான திட்­டத்­திற்கு செல்ல வேண்டும். எமக்கு முகா­மைத்­துவம் தொடர்பில் பெரும் சவால் உள்­ளது. அரச சேவை  மேலும் செயல்­தி­ற­னாக மாற வேண்டும்.

அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும். தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக பல விட­யங்­களை சாதிக்க வேண்­டி­யுள்­ளது.

மேலும் தேர்தலை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படு கின்றது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தேவைக் கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப் பதற்கும் தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றார்.

Leave a comment