பஸ் கட்டணத் திருத்தம் பற்றிய இறுதித் தீர்மானம் இன்று

573 0

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பாக இன்று அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இன்று கூடவுள்ள அமைச்சரவை பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment