சீனா – ஈரான் கடற்படைகள் வளைகுடா பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி

357 0

அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சீனா மற்றும் ஈரான் நாட்டின் கடற்படைகள் வளைகுடா பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபடு வருகின்றன.

அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சீனா மற்றும் ஈரான் நாட்டின் கடற்படைகள் வளைகுடா பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபடு வருகின்றன.

ஈரான் நாட்டு கடல் எல்லையொட்டியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து செல்லும் அமெரிக்க கப்பல்களை ஈரான் நாட்டு கடற்படையினர் வழிமறித்தும், விரட்டியடித்தும் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், சீனா மற்றும் ஈரான் நாட்டின் கடற்படைகள் வளைகுடா கடல்பகுதியில் இன்று முதல் போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

சீனாவுக்கு சொந்தமான இரண்டு கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் மற்றும் கடற்படை வீரர்கள் ஓமன் நாட்டை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நடைபெற்று வரும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் ஈரான் கடற்படையை சேர்ந்த சுமார் 700 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a comment