பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு

250 0

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் ஆட்சியை பிடித்தார்.

அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி கடந்த 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும். அவற்றுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெரும்பான்மையான இடங்களில் அதிபர் மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.

பிரான்சை பொறுத்த வரை எம்.பி., தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதற்காக 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத ஓட்டு கிடைக்காவிடில் குறைந்த ஓட்டுகள் பெற்றவர்கள் நீக்கப்பட்டு முன்னணியில் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். அவர்களில் 80 சதவீதம் வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முதல் சுற்று தேர்தலை வைத்து எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். என கணிக்க முடியாது. எனவே இன்று 2-வது சுற்று தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் மட்டும் போட்டியிட்டனர்.

அதற்காக பிரான்ஸ் முழுவதும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் ‘கியூ’ வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர். வெளி நாடுகளில் வாழும் பிரஞ்ச் மக்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க வசதியாக அந்தந்த நாட்டு பிரான்ஸ் தூதரகங்களில் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்னன.

வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதல் சுற்று தேர்தலில் மெக்ரான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் தேர்தலிலும் மெக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி இன்னும் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 390-ல் இருந்து 430 இடங்கள் வரை அதிபர் மெக்ரான் கட்சி கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால் ஓட்டெடுப்புகள் நடைபெறும் போது அதிபருக்கு சாதகமான முடிவுகள் எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a comment