ஞானசார தேரரை அரசாங்கமே மறைத்து வைத்துள்ளது

331 0

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது வேறு யாருமல்ல அரசாங்கம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

அத்துடன் தற்போதிருக்கின்ற நிலையில் இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும் பொலிஸாருக்கு தற்போதிருக்கின்ற அதிகாரங்கள் போதுமானது என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

Leave a comment