கர்நாடக மாநிலத்தில் இன்று பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன

354 0

பெட்ரோல், டீசல் விலையை முடிவு செய்யும் உரிமையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் பங்க்குகள் இன்று மூடப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறையை இன்று முதல் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை முடிவு செய்யும் உரிமையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் பங்க்குகள் இன்று மூடப்பட்டன. மைசூரு, தாவண்கரே, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டன.

இதனால் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்ற சரக்கு மற்றும் போர்வெல் லாரிகள் டீசல் கிடைக்காமல் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன.

பெட்ரோல் பங்க்குகள் இன்று மூடப்பட்டிருந்தால் சில வியாபாரிகள் கள்ளச்சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.100 வரை விற்பனை செய்தனர்.பெங்களூரு நகரிலும் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பெட்ரோல் பங்க்குகள் திறந்து இருந்தன.

Leave a comment