ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர் சுகாதார தொண்டர்கள் (காணொளி)

305 0
கடந்த பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 820 க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த 28 நாட்களாக அமைதியான முறையில் வடமாகாண சுகாதார அமைச்சிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில்.
கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தியிருந்தினர்.எனவே இன்றைய தினம் சாதகமான முடிவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆளுநர் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்றைய தினம் வடக்கு  ஆளுநருக்கும் சுகாதார தொண்டர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது இச்சந்திப்பில் ஆளுநர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏற்கனவே பணியாற்றிய சுகாதார திணைக்களங்களில் பணியாற்றுமாறு பணித்ததோடு  அத் திணைக்களங்களில் ஓய்வு பெறுவோரின் வெற்றிடத்திற்கு இணங்க புதிய நியமனங்களை சேவை அடிப்படையில் வழங்குவதாக உறுதியளித்ததோடு எழுத்து வடிவிலும் தருவதாக தெரிவித்ததை யடுத்து சுகாதார தொண்டர்கள் இன்றுடன் தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
https://youtu.be/UyKRgkDCnW4