வடக்கு முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு

254 0
வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியை  சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள்22 பேர் இணைந்து கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீர்மானம்  ஒன்றினை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு தொலைபேசி மூலம் முதலமைச்சரை தொடர்பு கொண்ட மாவை சேனாதிராஜா நீங்கள் நான்கு அமைச்சரையும் மாற்ற உத்தேசித்துள்ளதாக அறிகின்றேன் எனினும் நான்கு அமைச்சர்களையும் மாற்ற வேண்டாம் என முதல்வரிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்த நிலையில் இன்றைய தினம் முதலமைச்சர் நான்கு அமைச்சர்களையும் மாற்றும் முடிவினை அறிவித்த நிலையில்  கட்சியின் முடிவை மீறி வடக்கு மாகாண  நான்கு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழரசு கட்சியினர் முதலமைச்சர் மீது கோபம் கொண்டு  இந்த நடவடிக்கையினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  வடக்கு அமைச்சர்களான குருகுலராஜா,சத்தியலிங்கம்,மற்றும் டெனீஸ்வரன். தலைமையிலான ஏனைய  மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தம் 22 பேர் கையொப்பமிட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம்  கையளித்துள்ளனர்.
முதலமைச்சரை மாற்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளை சேர்ந்த சில உறுப்பினர்களும் தமிழரசு கட்சியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.தற்போதைய முதல்வர் பதவியிழக்கும் நிலையில்  அடுத்த முதலமைச்சராக தற்போதைய சுகாதார அமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பரிந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Leave a comment