படையினர் நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைக்க கூடாது – சிவாஜிலிங்கம்

228 0

வட மாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியா தடுக்க வேண்டும் என, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கு அம் மாகாண கல்வி அமைச்சு உடனடியாகவே நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கருத்து தெரிவிக்கையில்,

“பனங்காட்டுக்குள் புத்தி கூர்மை” என தலைப்பிட்டு நிகழ்வொன்றை படையினர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியுள்ளனர்.

இதில், மாலை 6.00 மணிக்கு பின்னர் பாடசாலை மாணவர்கள் அழைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இராணுவம் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் படை முகாமுக்குள் நடத்த வேண்டும். அதற்கு பாடசாலை மாணவர்களை அழைக்க கூடாது என கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இவ்வாறான நிகழ்வு நடைபெற்றமை தொடர்பாக எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கின்றபோது முன்னதாகவே எமக்கு தெரியப்படுத்துவார்கள், எனினும் இந்த நிகழ்வு குறித்து தெரியப்படுத்தவில்லைஎனவே இது பற்றி அவதானிக்கப்படும் என்றார்.