வடக்கில் ஜுன் மாதம் முதல் மின் விநியோகத் தடை

369 0
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த மின் விநியோகத்தடையானது, ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.