மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில், இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) இரவு சுமார் 08.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர், முன்னதாக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளதாக, உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தக்கம் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனுடன் தொடர்புடைய இருவர் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுற்றுவேலி என்பன அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

